மாசாணி அம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை

பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, 44 லட்சத்து, 46 ஆயிரத்து, 247 ரூபாய் பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவு வந்து செல்கின்றனர்.

இதில், பக்தர்கள் பலர் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின் சுவாமிக்கு, காணிக்கை செலுத்துவார்கள்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி, கோவிலில் காணிக்கை என்பதற்கான பணி நடந்தது. 31 உண்டியல்கள் திறந்து கணக்கிடப்பட்டதில், காணிக்கையாக, 44 லட்சத்து, 46 ஆயிரத்து, 247 ரூபாய் இருந்தது. மேலும், 34 கிராம் பொன்னினங்களும், 126 கிராம் வெள்ளியினங்களும் இருந்தது.

உண்டியல் திறப்பின் போது மாசாணி அம்மன் கோவில் தக்கார் ராஜ்குமார், கோவில் துணை ஆணையர் சுவாமிநாதன், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை ஆணையர் விமலா, தக்கார் பிரதிநிதி அருண்குமார், ஆனைமலை சரக ஆய்வர் வடிவுக்கரசி, கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.

Advertisement