வடவள்ளியில் டூவீலரில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
தொண்டாமுத்தூர்: வடவள்ளி, வி.என்.ஆர். நகர் பழனிசாமி மனைவி சாவித்ரி, 49. இவர் நேற்று (நவ.,21) இரவு பேரூரில் இருந்து தனது மகன் பிரகாஷ் உடன், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். நாகராஜபுரம் அருகே நிலை தடுமாறி, இருசக்கர வாகனத்தில் இருந்து, சாவித்ரி தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இன்று (நவ.,22) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement