பனித்திட்டு பகுதியில் பனை விதை நடவு
அரியாங்குப்பம்: உலக மீனவர் தினத்தையொட்டி பனித்திட்டு கிராமத்தில் பனை விதை நட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு கிராமத்தில் 1 லட்சம் பனை விதை நடும் பணி, மார்டின் குழுமம் மற்றும் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி இணைந்து, துவக்கப்பட்டது. தனசுந்தராம்பாள் சாரி டெபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், அரிகிருஷ்ணன், அய்யனாரப்பன், மார்டின் குழும மற்றும் தனசுந்தராம்பாள் நிர்வாகிகள் கிராம மக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பனித்திட்டு கடற்கரை ஓரமாக முதல் கட்டமாக 2,500 பனை விதை நடவு செய்யப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement