இளம்பெண் தற்கொலை டி.எஸ்.பி., விசாரணை
விருத்தாசலம்: திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆலடி அடுத்த பழையபட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழன்பன், 30; இவரது மனைவி வித்யா, 20; திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவன், மனைவிக்கும் இடையே ள் அடிக்கடி குடும்பத் தகராறு இருந்தது. இன்று (நவ.,22) காலை 10:00 மணியளவில் மீண்டும் சண்டை ஏற்பட்டதில் மனமுடைந்த வித்யா, சமையலறை மின்விசிறியில் துாக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடன், தமிழன்பன் உள்ளிட்ட உறவினர்கள் அவரை மீட்டு, அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வித்யா வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டது தெரிந்தது. விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் விசாரித்தார்.
சந்தேக மரணம் பிரிவின் கீழ் ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். வித்யாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.