சிலம்ப போட்டி

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலைத்தாய் சிலம்பம் சார்பில், மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சிலம்பாட்ட போட்டி தர்மபுரியில் நேற்று நடந்தது.

இதில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் குத்துவரிசை, நெடுக்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு, வேல் கம்பு, சுருள் வால், வால் வீச்சு உள்ளிட்ட 8 போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில் கலந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்திய மாணவர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

Advertisement