மலைக்காடாக மாறிய மயானம்
அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டியில் மயானம் பராமரிப்பின்றி மலைக்காடாக காட்சியளிக்கிறது.
இங்கு அலங்காநல்லுார் மெயின் ரோட்டில் மயானம் அமைந்துள்ளது. முறையான பராமரிப்பில்லாததால் செடி, கொடிகள் அடர்ந்து ஆள்நடமாட்டம் இல்லாத காடு போல காட்சியளிக்கிறது.
இங்குள்ள காத்திருப்போர் கூடத்தை செடி, கொடிகள் ஆக்கிரமித்துள்ளதால் அக்கட்டடம் இருப்பதே தெரியவில்லை. இறுதிச் சடங்குகளின் போது வருவோர் மிகுந்த சிரமமடைகின்றனர்.
அப்பகுதி ஜவான் கூறுகையில், ‘‘மயானத்தில் புதிதாக கட்டப்பட்ட எரிமேடை, காத்திருப்போர் கூடத்தை சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து புதராக மாறிவிட்டது. இதனால் பழைய எரிமேடையையே பயன்படுத்துகிறோம். இறுதிச் சடங்குகளின் போது சிரமத்திற்கு இடையேதான் செயல்படுகிறோம். நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களை வைத்தே இதனை சரி செய்திருக்கலாம். பலமுறை ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
அறுபத்து மூன்று நாயன்மார் திருவீதி உலா
-
25 ஆண்டுக்கு முன் படித்து பள்ளியில் சந்தித்து நெகிழ்ச்சி
-
போலீஸ் ஸ்டேஷனில் 3 காதல் ஜோடி தஞ்சம்
-
படகுகளுக்கு டீசல் செலவை குறைக்க சோலார் அமைப்பு நிறுவ நடவடிக்கை: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
-
6 பேர் கைது
-
ரூ.77 லட்சம் நகை கடன் மோசடி நிதி நிறுவன கிளை மேலாளர் கைது