

உலகெங்கும் பொங்கல் கொண்டாட மக்கள் தயாராகிவிட்டனர். எங்கும் கரும்புகளும் , மண் பானைகள், புத்தாடைகள் என மகிழ்ச்சி களைபூண்டுள்ளது. பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு பொங்கல் செய்து படைப்பது தான் சிறப்பு. அப்படி படைக்கப்படும் பொங்கலில் உள்ள சில வகைகளும் செய்யும் முறையும்..!
சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பாசி பருப்பு - கால் கப்
தண்ணீர் - 4 கப்
ஏலக்காய் - 2
முந்திரி, திராட்சை - கால் கப்
வெல்லம் - 1 கப்
செய்முறை : பச்சரிசி மற்றும் பாசிபருப்பை சேர்த்துக் கழுவிவிடவும். குக்கரில் போட்டு நான்கு கப் தண்ணீர் ஊற்றி நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும். வெல்லத்தை உருக்க வேண்டும். பச்சரிசி வெந்ததும் உருக்கிய வெல்லத்தை அதில் ஊற்றிக் கிளறவும். ஏலக்காய் பொடி சேர்க்கவும்.பின் மிதமான சூட்டில் வைத்து கிளறிக் கொண்டே இருந்தால் வெல்லம் நன்குக் கலந்துவிடும். இறுதியாக மூன்று ஸ்பூன் நெய் விட்டு கால் கப் முந்திரி, திராட்சை சேர்த்து வதக்கி பொங்கலில் கொட்டி கலக்கவும்.