



ஜவ்வரிசி பொங்கல்
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 300 கிராம்
வெல்லம் 200 கிராம்
பால் - 200 மி.லி
நெய் - 50 கிராம்
முந்திரி - 10
காய்ந்த திராட்சை - 5
ஏலக்காய் - 5
செய்முறை: பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு ஜவ்வரிசையைப் போடவும். ஜவ்வரிசி நன்றாக வெந்ததும், ஏலக்காய் வெல்லம் நன்கு தட்டி அதில் போடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து நன்கு கிளறவும். ஜவ்வரிசி கெட்டிப் பதத்திற்கு வந்ததும் பால் மற்றும் நெய் சேர்க்கவும். ஒரு கடாயில் தேவையான அளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வதக்கி ஜவ்வரிசியில் போடவும்.