கற்கண்டுப் பொங்கல்

கற்கண்டுப் பொங்கல்

தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப்

பால் - 2 கப்

தண்ணீர்- 1 கப்

அரைத்த கற்கண்டு - 4 கப்

முந்திரி - 3

நெய் - 2 மே.கரண்டி

ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை

காய்ந்த திராட்சை - 3

செய்முறை: பாலில் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் அரிசியை கொட்டி குழைந்து வரும்வரை வேக வைக்க வேண்டும். குக்கரில் வைப்பதாக இருந்தால் 3 விசில் வரை வைக்க வேண்டும். பின் அதில் அரைத்த கற்கண்டு சேர்த்து நன்கு கிளரவும். பின் சிறிய தீயில் 3 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். இறுதியாக ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து வதக்கி இறக்கிய பொங்கலில் சேர்த்து நன்றாக கலக்கவும்.