கோதுமைப் பொங்கல்

கோதுமைப் பொங்கல்

தேவையான பொருட்கள்

உடைத்த சம்பா கோதுமை - 1 கப்

பாசிப் பருப்பு 1/4 கப்

வெல்லம் - 1 கட்டி

ஏலக்காய் பொடி - 1/4 மே.கரண்டி

காய்ந்த திராட்சை - 4

முந்திரி மற்றும் பாதாம் - 3

நெய் - 1 மே.கரண்டி

தேங்காய் துருவியது - 1 மே.கரண்டி

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் இல்லாமல் உடைத்த சம்பா கோதுமை மற்றும் பாசிப் பருப்பு இரண்டையும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். 3 கப் நீர் ஊற்றி சம்பா கோதுமை மற்றும் பாசிப் பருப்பை குழையும் வரை வேக விடவும். குக்கரில் 2 விசில்வரை விடலாம். இறுதியாக, கடாயில் நெய் ஊற்றி சிறு தீயில் பாதாம்,முந்திரி, திராட்சை ஆகியவற்றை 1 நிமிடம் வதக்கவும். அதில் துருவிய தேங்காயை போட்டு அரை நிமிடம் வதக்கவும். இதை அப்படியே வேக வைத்த கோதுமை , பருப்புக் கலவையில் ஊற்றி நன்குக் கிளரவும்.