

பொங்கலன்று மதியம் முன்னோரை அவசியம் வழிபட வேண்டும். திருவிளக்கின் முன், நம் முன்னோரின் படங்களை வைத்து மாலை அணிவியுங்கள். படம் இல்லாவிட்டால், அவர்கள் அங்கே எழுந்தருளியிருப்பதாக பாவனை செய்து கொள்ளுங்கள். ஒரு இலையில், வெற்றிலை, பாக்கு, பழம், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், இனிப்பு, கார வகைகள், முன்னோர் விரும்பி சாப்பிட்ட காய்கறி வகைகளைப் படையுங்கள். திருவிளக்கேற்றி தீபாராதனை செய்யுங்கள். குழந்தைகளுக்கு இனிப்பு கொடுங்கள்.