இனிய கரும்புக்குள் இவ்ளோ இருக்கு..!

பொங்கல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கரும்பு. உழவர்களின் கடும் உழைப்பில் உருவாகும் கரும்பை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவதற்கான காரணத்தை ஆன்மிகம் அருமையாகச் சொல்கிறது. கரும்பின் மேற்பரப்பில் எத்தனையோ வளைவுகளும் முடிச்சுகளும் இருக்கின்றன. ஆனால், உள்ளே இனிப்பான சாறு இருக்கிறது. இதே போல் வாழ்க்கையில் கடுமையான மேடு பள்ளங்களால் சிரமங்களைச் சந்திக்க வேண்டி இருந்தாலும், அவற்றை சமாளித்து விட்டால் தெய்வத்துவம் என்ற இனிய சாறை நாம் சுவைத்து மகிழலாம். கரும்பைச் சுவைக்கும்போது, அதன் தெய்வத் தன்மையையும் உணர்ந்து சுவையுங்கள்.