வடமாநிலங்களில் பட்டத்திருவிழா

பொங்கல் பண்டிகையை வடமாநிலங்களில் பட்டம் பறக்கவிட்டு கொண்டாடுகின்றனர். குஜராத் மாநிலத்தில் "மகர சங்கராந்த் என்ற பெயரில் இவ்விழாவை,பெரிய அளவில் கொண்டாடுகின்றனர். பெரியோர், சிறியோர், ஏழை, பணக்காரர் என்ற பாரபட்சமின்றி ஒற்றுமையை வெளிப்படுத்தும் விழா கொண்டாடப்படும். மக்கள் தங்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். மேலும், விதவிதமான பட்டங்களைப் பறக்க விடுவர். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் தங்கள் நாட்டின் சின்னம், கலாச்சாரம், நாட்டின் பெருமைகளை வெளிப்படுத்தும் படங்கள் அச்சிட்ட பட்டங்களைப் பறக்க விடுவர்.