'யா...யா...' போட்ட வழக்கறிஞர்; குட்டு வைத்தார் தலைமை நீதிபதி; சுப்ரீம் கோர்ட்டில் சுவாரஸ்யம்!

6

புதுடில்லி: உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர் ஒருவர், நீதிபதியிடம், 'யா...யா...' என பதில் அளித்தார். இதைக்கேட்டதும் கோபமுற்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ' இது ஒன்றும் காபி ஷாப் இல்லை, ஆம் என்று சொல்லிப்பழகுங்கள்' என்று அறிவுறுத்தினார்.



உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் வழக்கு விசாரணை ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது, ' இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உள் விசாரணை நடத்த வேண்டும்' என்று வழக்கறிஞர் கோரினார்.


இதற்கு, ' இது ஒரு சட்டப்பிரிவு 32 மனுதானா? நீதிபதியை எதிர்மனுதாரராக வைத்து நீங்கள் எப்படி பொதுநல மனுவை தாக்கல் செய்யலாம்' என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேட்டார். இதற்கு பதில் அளிக்கும் போது, வழக்கறிஞர், 'யா...யா...' என்ற ஆங்கில வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட் டென்ஷன் ஆனார்.


தலைமை நீதிபதி, 'இது ஒரு காபி ஷாப் இல்லை! இது என்ன யா...யா... இந்த வார்த்தை எனக்கு அலர்ஜி. ஆம் என்று சொல்லிப்பழகுங்கள்' என கோபத்துடன் தெரிவித்தார். ''கோகோய் இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தார். நீதிபதிக்கு எதிராக இதுபோன்ற மனுவை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. உள் விசாரணையை நீங்கள் கேட்க முடியாது' என்று சந்திரசூட், வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

Advertisement