வெள்ளி வென்றார் ஸ்ரீராம் * இந்திய ஓபன் தடகளத்தில்...

பாட்னா: இந்தியன் ஓபன் தடகள போட்டி (23 வயதுக்குட்பட்ட) பீஹாரில் நடந்தது. நேற்று மூன்றாவது, கடைசி நாள் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஸ்ரீராம், அதிகபட்சம் 7.70 மீ., தாண்டி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
மற்றொரு தமிழக வீரர் சன்மத் தர்ஷன் (7.68 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார். கேரளாவின் அனுராக் (7.87 மீ.,) தங்கம் வசப்படுத்தினார்.
தமிழ் அரசு 'வெண்கலம்'
ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் தமிழ் அரசு, 21.52 வினாடி நேரத்தில் ஓடி, வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார். இவர் ஏற்கனவே, 100 மீ., ஓட்டத்திலும் வெண்கலம் வென்றிருந்தார்.
பெண்களுக்கான 'ஹெப்டத்லான்' போட்டியில் தமிழகத்தின் தீபிகா, மொத்தம் 4975 புள்ளி எடுத்து, வெண்கலம் கைப்பற்றினார்.

Advertisement