அரும்புலியூர் ஏரி உபரிநீர் கால்வாய் துார்வாரி பராமரிக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான 450 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. பருவ மழை காலத்தில் இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், கலங்கல் வழியாக உபரி நீர் வெளியேறி தண்டரை, சித்தனக்காவூர் ஆகிய ஏரிகளுக்கு சென்று, மாம்பாக்கம் வழியாக அடுத்தடுத்த பகுதிகளுக்கு சென்றடையும்.

அரும்புலியூர் ஏரியில் இருந்து, உபரிநீர் வெளியேறும் இக்கால்வாய், சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி தூர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது.

இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் சீராக செல்ல வழி வகை இல்லாமல், கால்வாயில் ஆங்காங்கே தேங்கி விவசாய நிலங்களில் வழிந்தோடும் நிலை உள்ளது.

எனவே, அரும்புலியூர் ஏரியில் இருந்து, உபரி நீர் வெளியேறி செல்லும் கால்வாயை தூர்வாரி சீர் செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement