இதயம் பேசுதே...

''ஹலோ... நான் தான் உங்க இதயம் பேசுகிறேன். என்னை பாதுகாக்க தினமும், அரை மணி நேரம் ஏதாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாரம் முழுவதும் செய்ய முடியவில்லை என்றாலும், ஐந்து நாளாவது இதனை பின்பற்ற வேண்டும்,''

'மிதமான உடற் பயிற்சிகளை செய்யலாம். சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். முக்கியமாக, சொல்லப்போனால், பழங்கள், காய்கறிகளை அதிகம் உட்கொள்ளலாமே...''

''அப்போதுதான் எனக்கு போதுமான சத்து கிடைக்கும். இன்றைய சூழலில், இட்லி, தோசை, சாப்பாடு என, 70 முதல், 80 சதவீதம் அரிசி வகை உணவுகளைத் தான் சாப்பிடுகிறீர்கள். பழங்கள், காய்கறிகள் என்று பார்த்தால், அது, 10 சதவீதத்தை கூட தாண்டாது. நான் சொல்றதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க. அரிசி வகை உணவுகளை, 50 சதவீதம் குறைத்து, மீதமுள்ளவைக்கு காய்கறி, பழங்களுக்கு மாறிடுங்க...''

''இன்னொரு விஷயம், ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காராதீங்க. அவ்வப்போது, சின்ன சின்ன வேலைகளை செய்வதும், நடப்பதும் சிறப்பு. மன அழுத்தத்தை களைவது முக்கியமான ஒன்று. பாஸ்ட்புட், ஆயில் கலந்த உணவு, பிரைடு புட்ஸ் போன்ற தவறான உணவு முறைகளை பிளீஸ் விட்டுடுங்க. வயதானால், இருதய பிரச்னை வருவது வழக்கம்,''

''ஆனால், இப்பல்லாம், சின்ன வயசுக்காரங்களுக்கு கூட 'ஹார்ட் அட்டாக்' வருவது முக்கியமான காரணமே, உங்களது தவறான உணவு பழக்க வழக்கங்களே. என்னை பேணிக்காத்தால் மட்டுமே முழு உடலும் நன்றாக இருக்கும். நான் சொன்னதை முறையாக பின்பற்றினால் எனக்கு மட்டுமல்லீங்க... உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது. ஓ.கே.,!'' என இதயத்தை பாதுகாப்பது குறித்து,திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இருதய டாக்டர் ராம்குமார் கூறினார்.

Advertisement