போரை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்: ஜோ பைடன் வலியுறுத்தல்

1

வாஷிங்டன்: லெபனான் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமரிடம் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.


பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், இப்போது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

போரை நிறுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவிடம் தொலை பேசி வாயிலாக பேசினார்.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய கிழக்கில் முழுதுவமாக போரை நிறுத்த வேண்டும் என்பதை எனது எண்ணம். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவிடம் பேச முடிவு செய்துள்ளேன் என்றார்.

Advertisement