ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்! ஜி.என்., கார்டன் மக்கள் வலியுறுத்தல்

திருப்பூர் : திருப்பூர் ஜி.என்., கார்டனில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றியும், போக்குவரத்து இடையூறாக அமைத்த உயர் அழுத்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி, 60வது வார்டில் ஜி.என்., கார்டன், குமரன் நகர், அசோக் நகர், சேரன் காலனி, நெசவாளர் காலனி, மருதமலை ஆண்டவர் நகர், ரேணுகா நகர் உள்ளிட்ட பகுதிகளில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

சில பகுதிகளை இணைக்கும் ரோடாக உள்ள (ராமேகவுண்டம்பாளையம், நாச்சிபாளையம், பெருந்தொழுவு, அலகுமலை) பகுதியில் மாநகராட்சி பாதை, பி.ஏ.பி., வாய்க்கால் ஆக்கிரமிப்பு கண்டு பிடிக்கப்பட்டது.

இச்சூழலில், திடீரென மின்வாரிய அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக ஹெச்.டி., லைனை தனி நபருக்கு இடைஞ்சல் என்று கூறி, நடு ரோட்டில் மின்கம்பம் நட்டு வைக்க முயற்சி செய்கின்றனர்.

இதனால், மக்களுக்கு மிகவும் இடையூறு ஏற்படுகிறது. பி.ஏ.பி., வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியவர், மக்களை மிரட்டும் வகையில் நடந்து வருகிறார். ஆக்கிரமிப்பை அகற்றி, மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement