கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

பெரியகுளம்: கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதி வட்டக்கானல், வெள்ளகெவியில் பகுதியில் பெய்யும் மழை, கும்பக்கரை அருவி நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. கடந்த மாதம் துவக்கத்திலிருந்து அருவியில் நீர் வரத்து குறைய துவங்கியது. செப்.27ல் தண்ணீர் மிகவும் குறைந்தது. தண்ணீர் குறைவு காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தை தவிர்க்க வனத்துறை நிர்வாகம் நுழைவு கேட்டினை மூடுவதற்கு முடிவு செய்தனர். இந்நிலையில் செப். 28 ல் பெய்த கனமழையால் நிலைமை தலைகீழாக மாறி, அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் தமிழகத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

--

Advertisement