பைனலில் அல்காரஸ்-சின்னர்: சீன ஓபனில் மோதல்

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் பைனலுக்கு ஸ்பெயினின் அல்காரஸ், இத்தாலியின் சின்னர் முன்னேறினர்.

சீனாவின் பீஜிங்கில், சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ் மோதினர். முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றிய அல்காரஸ், இரண்டாவது செட்டை 6-3 என வென்றார். முடிவில் அல்காரஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.

மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சீனாவின் யுன்சாவோகேடே மோதினர். இதில் சின்னர் 6-3, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பைனலில் அல்காரஸ், சின்னர் மோதுகின்றனர்.

பெகுலா தோல்வி: பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் படோசா மோதினர். இதில் ஏமாற்றிய பெகுலா 4-6, 0-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
மற்ற 4வது சுற்றுப் போட்டிகளில் சீனாவின் ஜாங் ஷுவாய், உக்ரைனின் யூலியா ஸ்டாரோடப்ட்சேவா வெற்றி பெற்றனர்.

Advertisement