சென்னை-ஐதராபாத் 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

ஐதராபாத்: சென்னை, ஐதராபாத் அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 0-0 என 'டிரா' ஆனது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. நேற்று, ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், சென்னை அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
சென்னை அணி, 3 போட்டியில், ஒரு வெற்றி, ஒரு 'டிரா', ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 3 போட்டியில், ஒரு 'டிரா', 2 தோல்வி என ஒரு புள்ளியுடன் 12வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில் பெங்களூரு (9 புள்ளி), பஞ்சாப் (9), ஜாம்ஷெட்பூர் (8) அணிகள் உள்ளன.

Advertisement