வீதியெங்கும் குப்பை: குமரன் நகரில் அவலம்

கொளத்துார், திரு.வி.க.நகர் மண்டலம் கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட, 66வது வார்டு குமரன் நகர் அண்ணல் காந்தி தெரு சுற்றுவட்டாரத்தில், தினமும் வீடு வீடாக சென்று குப்பை பெறுவதில்லை.

இதனால், பகுதி மக்கள் குப்பையை கண்ட இடத்தில் வீசுகின்றனர்.

இது குறித்து பரந்தாமன் கூறுகையில், ''எங்கள் பகுதியில் தினமும் குப்பை கழிவுகளை வீடுவீடாக பெறுவதில்லை. சாலையில் உள்ள குப்பையையும் தினமும் அகற்றுவதில்லை. இதுகுறித்து அதிகாரியிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.

Advertisement