வழிப்பறி ஆசாமிகள் இருவர் கைது 9 மொபைல் போன்கள் பறிமுதல் 

பண்ருட்டி : பண்ருட்டியில் வழி சொல்வது போல் நடித்து மொபல் போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த காட்டுக்கூடலுார் நாச்சிவெள்ளையான்குப்பம் பகுதியை சேர்ந்த வெங்க டேசன் மகன் சிவபாலன், 21; தனியார் வங்கி ஊழியர்.

இவர், கடந்த 27ம் தேதி இரவு, பண்ருட்டி ரயில்வே சப்வே அருகில் நின்றிருந்த இருவரிடம் வழிகேட்டார்.

அவர்கள், வழி காண்பிப்பதுபோல் நடித்து, சிவபாலனிடம் இருந்த மொபைல் போன், 1500 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்தனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிந்து, அப்பகுதி சி.சி.டி.வி.கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

அதில், அம்பேத்கர் நகர் சேர்ந்த குமார் மகன் காமேஷ்,24; ஆர்.எஸ்.மணி நகர் சேர்ந்த செல்வம் மகன் மதன்,19; ஆகிய இருவர் வழிப்பறி செய்தது தெரியவந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, பல்வேறு இடங்களில், 2 லட்சம் மதிப்பிலான 9 மொபைல் போன்களை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

பண்ருட்டி போலீசார் இருவரையும் கைதுசெய்து, 9 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement