ரேபிஸ் நோய் குறித்து ஓவியப்போட்டி மாணவர்களுக்கு முதல்வர் பரிசு

புதுச்சேரி : ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு போட்டியில், சிறந்த ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.

புதுச்சேரி விலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மத்திய விலங்குகள் நல வாரியம் இணைந்து ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தினர். இந்த போட்டி, தட்டாஞ்சாவடி சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. ஓவியப் போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் பழனி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல் மாணவர்கள் வரைந்த ஓவியத்தை பார்வையிட்டார்.

மத்திய விலங்குகள் நல அதிகாரி செல்வமுத்து ரேபிஸ் எவ்வாறு பரவுகிறது அதை தடுப்பது குறித்து மாணவர்களிடம் விளக்கினார். ஓவிய போட்டியின் ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட ஆசிரியர்கள் மற்றும் ஓவிய ஆசிரியர் ஆகியோர் செய்திருந்தனர்.

சிறந்த ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Advertisement