ஈஷா யோகா மையத்தில் கோவை எஸ்.பி., விசாரணை

1

கோவை: கோவை மாவட்டம், வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ், 69. இவருக்கு, கீதா, 42, லதா,39 ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இருவரும், 2011ம் ஆண்டு முதல், பிரம்மச்சரியம் பெற்று, தங்களது பெயர்களை, மாமயூ மற்றும் மாமதி என பெயர் மாற்றம் செய்து, ஈஷா யோகா மையத்திலேயே வசிக்கின்றனர்.

இந்நிலையில், காமராஜ் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'என் மகள்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், 'கோவை மாவட்ட போலீசார் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, கோவை எஸ்.பி., கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் அம்பிகா தலைமையிலான குழுவினர், நேற்று காலை 10:45 மணிக்கு, ஈஷா யோகா மையத்தில் விசாரணைக்கு வந்தனர்.

அங்கு தங்கியுள்ள, பெண் பிரம்மச்சாரிகளிடமும், தன்னார்வலர்களிடமும், இரவு 7:45 மணி வரை, விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கையை, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement