கல்வி உதவி தொகை விழிப்புணர்வு கூட்டம்

புதுச்சேரி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் நலத்துறை அலுவலகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பான கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கி, பேசுகையில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வித் உதவி தொகை தொடர்பாக விழிப்புணர்வு இல்லை.

ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

அரசு பள்ளியில் பயிலும், ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தனியார் பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களை பள்ளி கட்டணம் கேட்டு தொந்தரவு செய்ய கூடாது.

அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்கள், கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை பள்ளியில், கொடுத்து உதவித் தொகை பெறுவதற்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.

நிகழ்ச்சியில், நோடல் அதிகாரி, பழனி, ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி செந்தில்குமார், சிவராமன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement