மத்திய அரசு அதிகாரி ஆகணுமா; 160 பேருக்கு வாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க!


புதுடில்லி: மத்திய அரசு, கேபினட் செயலகம் (சி.எஸ்.,) துணை கள அதிகாரி பதவிகளுக்கு 160 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 21.


மத்திய அரசு, கேபினட் செயலகத்தில் (சி.எஸ்.,) துணை கள அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

துணை கள அதிகாரிகள் - 160.




கல்வித் தகுதி என்ன?




அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் அல்லது அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.



வயதுவரம்பு




விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.



தேர்வு செய்வது எப்படி?




GATE தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிப்பது எப்படி?




விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை முறையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் எண்.001, லோதி சாலை தலைமை தபால் நிலையம், புதுடில்லி- 110003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, https://cabsec.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Advertisement