தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போச்சு; வெள்ளத்தில் இறங்கியதால் தப்பியது ஹெலிகாப்டர்!

4


பாட்னா: பீஹாரில் மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர், இன்ஜின் கோளாறு காரணமாக வெள்ளநீரில் தரையிறக்கப்பட்டது. வேடிக்கை பார்க்க திரண்ட மக்கள், ஹெலிகாப்டரில் இருந்த பொருட்களை அள்ளிச்சென்றனர்.

பீஹாரில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் தவித்துவரும் நிலையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

அந்த வகையில், 3 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று வானத்தில் பறந்து கொண்டிருந்த போது இன்ஜின் பழுதடைந்தது. இதனையடுத்து விமானி சமயோசிதமாக செயல்பட்டு அந்த ஹெலிகாப்டரை, முசாபூர் நகரில் வெள்ளநீரில் உடனடியாக தரையிறக்கினார். இதனால், அதில் இருந்த 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஹெலிகாப்டர் தரையிறங்கியது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் அந்த இடத்திற்கு படகில் வந்து அதில் இருந்த நிவாரண பொருட்களை அள்ளிச்சென்றனர்.

Advertisement