‛‛கடிகாரம்'' சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் புதிய மனு

1

புதுடில்லி : ‛‛கடிகாரம்'' சின்னத்தை தன் கட்சிக்கு ஒதுக்கிட கோரியும், வேறு சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கிட கோரியும் தேசிய வாத காங்., கட்சியின் சரத்பவார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2023ம் ஜூலையில் மஹாராஷ்டிராவில் பிரதான எதிர்கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சி இரண்டாக உடைந்தது. அஜித்பவார் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வரானார்.


இரு தரப்பினரும் கட்சியின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் கமிஷனில் முறையிட்டனர். இதில் கட்சி சின்னமான ‛‛கடிகாரம்'' தொடர்பான வழக்கில் சரத்பவாரின் சரத்சந்திரபவார் தேசியவாத காங். என்ற கட்சிக்கு டிரம்பெட் ஊதும் மனிதன் சின்னம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கில் சின்னம் தற்காலிகமானது தான் என தீர்ப்பளித்தது.

இந்நிலையில் மஹாராஷ்டிரா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து சரத்பவார் உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். அதில் தேர்தல் நடைபெற உள்ளதால், கடந்த 25- ஆண்டுகள் எனது கட்சியின் சின்னமாக இருந்த ‛ கடிகாரம்'' சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும்.

மக்களிடம் சின்னம் குழப்பம் ஏற்படாமல் இருக்க அஜித்பவார் கட்சிக்கு வேறு சின்னத்தை ஒதுக்க வேண்டும். வரப்போகும் தேர்தலில் அஜித்பவார் கட்சி ‛‛கடிகாரம்'' சின்னத்தை பயன்படுத்த கூடாது.இவ்வாறு அதில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement