12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

சென்னை:மாநிலம் முழுதும் பறிமுதல் செய்யப்பட்ட, 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டதாக, அமலாக்கப் பணியகம் குற்றப் புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், போதை பொருள் கடத்தல் மற்றும் ஒழிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவை இணைத்து, அமலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வு துறை உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் கூடுதல் டி.ஜி.பி., அமல்ராஜ் கூறியதாவது:

கடந்த மார்ச் மாதம், 3,685; ஆகஸ்டில், 6,165; செப்டம்பரில், 2,950 என, மொத்தம், 12,800 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

போதை பொருளை ஒழிக்க, சட்டம் ஒழங்கு போலீசார், பிற மாநில மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

போதை பெருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, எந்த ஒரு தகவலாக இருந்தாலும், பொது மக்கள், கட்டணமில்லா, 10581 என்ற எண்ணுக்கும், 94984 10581 என்ற 'வாட்ஸாப்' எண்ணுக்கும் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement