குலசேகரப்பட்டினம் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

துாத்துக்குடி:குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நேற்று மாலை காளி பூஜை நடந்தது.

துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே கடற்கரை கிராமம் குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் நடக்கும் தசரா விழா புகழ்பெற்றதாகும். நேற்று மாலையில் கோயில் வளாகத்தில் யாகசாலையும், காளி பூஜையும் நடந்தது. 10 நாட்கள் நடக்கும் இவ்விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொள்கின்றனர்.

அக்.,12 இரவு கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்வு நடக்கிறது.

இவ்விழாவில் பக்தர்கள் வெவ்வேறு வேடமிட்டு குழுக்களாக கிராமங்களில் 10 நாட்கள் தங்கிருந்து வழிபாடு மேற்கொள்கின்றனர். தினமும் சுவாமி அம்பாள் வீதி உலா வருவர். சூரசம்ஹாரத்தன்று இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் கூடுவார்கள்.

Advertisement