தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை பூமி பூஜையுடன் துவக்கம்

2

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிக்காக நாளை 4 ம் தேதி வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடக்க உள்ளது.


தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறுகிறது. இதற்கான பணி, நாளை 4ம் தேதி வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறையில் அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள், மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்து மாநாட்டு பணியை துவக்க உள்ளனர்


இதற்காக மாநாட்டிற்கு இடம் வழங்கிய நில உரிமையாளர்கள் 25 பேரை நேற்று இரவு 7.15 மணிக்கு மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
Latest Tamil News

மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி , மாவட்ட தலைவர் குஷி மோகன், துணைத்தலைவர் வடிவேல், வழக்கறிஞர் அரவிந்த், இளைஞரணி தலைவர் மோகன், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் காமராஜ், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement