அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாடு

மதுரை: மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாடு தலைவர் சின்னப்பொண்ணு தலைமையில் நடந்தது.

துணைத் தலைவர் மாரியப்பன் வரவேற்றார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் கல்யாணசுந்தரம் தாக்கல் செய்தார். மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முனியசாமி துவக்கி வைத்தார். அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் மணிகண்டன் செயலறிக்கை வாசித்தார்.

மாநில துணைத் தலைவர் ஜெயராஜ ராஜேஸ்வரன், முன்னாள் மாநில தலைவர் நடராஜன், துணைத் தலைவர்கள் ஜெயராமன், அன்புசெல்வம், இணைச் செயலாளர்கள் வேல்முருகன், மாரி, முருகையன் உட்பட பலர் பங்கேற்று பேசினர். சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக ஏற்கனவே இருந்தவர்களையே மீண்டும் தேர்வு செய்தனர். இதற்கு கரூரில் நடக்க உள்ள மாநில மாநாட்டில் ஒப்புதல் வழங்கப்படும் என அறிவித்தனர்.

கூட்டத்தில், மதுரை நகரில் குண்டு, குழியான ரோடுகளை செப்பனிட வேண்டும். கோரிப்பாளையம் மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

புதிய காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில செயற்குழு உறுப்பினர் முத்துமோகன் நன்றி கூறினார்.

Advertisement