வீணான பொருளில் தயாராகும் விலை மதிப்புள்ள பொருட்கள்

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சார்பில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் தோப்பூர் ஊராட்சியில் 37 மகளிர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மேம்பாட்டு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஏழு நாட்கள் முகாமில் கைவினை பொருட்கள் தயாரித்தல், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, ஆரி வேலைப்பாடுகள், வீணாகும், கழிவுப் பொருட்களில் இருந்து விலைமதிப்புள்ள கலைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பொருட்களை சந்தைப்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

முகாம் நிறைவு விழா கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமையில் நேற்று நடந்தது. ஊராட்சித் தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் ஜெயபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், விக்னேஸ்வரன் பயிற்சியை ஒருங்கிணைத்தனர். இதில் பெண்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றது. வீணான பொருட்களில் தயாரான கலைப் பொருள்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Advertisement