ஜாதியற்ற சமுதாயம் வேண்டும் பாரதி சகாப்தம் தன்னந்தனியாக போராட்டம்

வெள்ளையன் ஏற்படுத்திய இந்தக் கல்வி முறையை மாற்றித் தொழில் கல்வி, என்.சி.சி., பயிற்சி என்று ஆக்க வேண்டும். இனிமேலாவது நாம் எல்லாரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்ச்சியில் வேகமாக உலகில் முன்னேற வேண்டும். ஜாதிகள் இல்லாத ஒரே சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் இரவு, பகலாக உழைக்க வேண்டும். அது ஒன்றுதான் நமது நாட்டை வாழ்விக்கும்.

- ராமவர்மபுரம் மாணவர் மாநாட்டைத்துவக்கிவைத்து டி.வி.ஆர்., பேச்சு



'எந்த நாடு தன் பெரியோர்களைப் போற்றுவதில்லையோ, அந்த நாட்டில் மேலும் பெரியோர்கள் தோன்றுவது அரிது' என்று, பாரதியார் கூறி உள்ளார். தமிழ் மொழியில் இப்போது பாரதி சகாப்தம் நடைபெறுகிறது. பாரதி தமிழ்மொழியைத் தட்டி எழுப்பி னார். பாரதிக்கு முன் எவ்வளவோ பேர் தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியிருந்தாலும் கூட, வசன உரைநடையில் கங்கைப் பிரவாகமான ஒரு நிலையை உண்டாக்கியவர் பாரதிதான். அவர் ஒரு தேசியக் கவி மட்டுமல்ல . . . ஒரு மறுமலர்ச்சிக் கவியுமாவார்.

- திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தில் நடந்த

பாரதி விழா பொதுக்கூட்டத்தில்



டி.வி.ஆர்., தனது தலைமையுரையில்...

ஒரு வேகத்திலோ, வேறு காரணங்களாலோ திடீரென்று, 'தினமலர்' தோன்றியதல்ல. நாஞ்சில் மண்ணை தமிழகத்துடன் சேர்க்க, பலமான ஆயுதம் வேண்டும்; அந்த ஆயுதம், பத்திரிகைதான் என்பதை டி.வி.ஆர்., உணர்ந்தார். அவரது பூர்வீகச் சொத்துக்கள், அவரது வருமானங்கள் அனைத்தையுமே பத்திரிகை என்ற ஆழ்கடலில் நாஞ்சில் மக்களுக்காக கொட்டினார். கொட்டுவது கண்ட மற்றவர்கள் எல்லாம் இரங்கல் கருத்துத் தெரிவித்தனரே தவிர, அவருக்கு மிக நெருக்கமானவர் கூட, செயலளவில் ஒத்துழைப்பு தராததால் அவர் தன்னந்தனியாக நின்று போராட வேண்டியது வந்தது.

Advertisement