'மக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கு மெமோ வழங்கப்படும்'

சேலம்: 'மக்கள் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கு மெமோ வழங்கப்படும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் அறிக்கை: சேலம் மாவட்டத்தில் லாட்டரி, குட்கா உள்ளிட்ட புகையிலை, போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்-குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு லாட்-டரி, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்வதோடு கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மக்கள் பாதுகாப்புக்கு மாலை நேரத்தில் போலீசாரின் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்-ளது. விபத்துகளால் ஏற்படும் காயம், உயிரிழப்பை தடுக்கும்படி, அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்-ளன. அங்கு விபத்துகளை தடுக்க, 'பேரிகார்டு' வைக்கப்படுகி-றது.
விபத்து, சைபர் குற்றங்கள், சிறுமியருக்கு எதிரான பாலியல் சம்ப-வங்களை தடுக்க, போலீஸ் சார்பில் பள்ளி, கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள், தங்கள் பிரச்னைகளை தீர்க்க போலீசாரிடம் மனு அளிக்கின்றனர். எஸ்.பி., அலுவலகங்களிலும் மனு கொடுக்-கின்றனர். இந்த மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்தில் நடவ-டிக்கை எடுக்க, போலீசாருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் நடவடிக்கை எடுக்காத போலீ-சாருக்கு, 'மெமோ' வழங்கப்படும். இதுகுறித்து இன்ஸ்பெக்-டரும் விளக்கம் அளிக்க வேண்டும். அதனால் மக்களின் புகார் மனுக்கள் மீது உரிய காலத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்-படும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாதபடி ரவுடிகள் கண்கா-ணிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். தொடர்ந்து குற்றங்-களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்-கப்படும்.

Advertisement