மாநில கபடி அணி: ஆ.தெக்கூர் தேர்வு

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் ஆ.தெக்கூர் எஸ்.வி.கே.மேல்நிலைப்பள்ளி மாணவர் 14 வயதிற்குட்பட்ட மாநில கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் எஸ்.மிதுன் 14. இவர் சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கான 14 வயதிற்குஉட்பட்ட கபடி அணியில் உள்ளார்.

செப்., மாதம் தேனியில் நடந்த ஐந்து மாவட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கபடி வீரர்கள் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிவகங்கை மாவட்ட பள்ளிகள் சார்பில் கடந்த வாரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தியப்பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த 14 வயதிற்குட்பட்ட மாநிலஅணிக்கான வீரர்கள்தேர்வில் பங்கேற்றார்.

அதில் தமிழக மாநில பள்ளி மாணவர் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த 'ரைடரான' இவர் மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கபடிப் போட்டியில் விளையாட உள்ளார்.

இவரை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement