திருப்புத்துாரில் நவராத்திரி விழா துவக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில், நின்ற நாராயணப்பெருமாள் கோயில்களில் நவராத்திரி விழா கொலு அலங்காரத்துடன் துவங்கியது.

திருத்தளிநாதர் கோயிலில் திருநாள் மண்டபத்தில் கொலு வைக்கப்பட்டு பக்தர்கள் பார்வையிட்டனர். மூலவர் சிவகாமி அம்மனுக்கு மாலை 6:00 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. கொலு மண்டபத்தில் உற்ஸவ அம்மன் சிவகாமி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு 7:45 மணிக்கு உற்ஸவ அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.

இன்று உற்ஸவ அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் காலை 10:00 மணிக்குமூலவர் மகாலெட்சுமிக்கு அபிேஷக, ஆராதனை நடந்தன.

மாலையிலிருந்து கொலுமண்டப படிகளில் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் இருந்த கொலுவை பக்தர்கள் தரிசித்தனர். கற்பக விருட்சத்தில் எழுந்தருளிய மகாலெட்சுமிக்கு இரவு 6:30 மணிக்கு தீபாராதனை நடந்தது.

Advertisement