எந்த நோய் பாதிப்பு வந்தாலும் தடுப்போம்

கொரோனா பேரிடரில், மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட வைத்து பேரிடரில் இருந்து காத்த பெருமை செவிலியர்களை சாரும்.

எந்த நோய் பாதிப்பு வந்தாலும் அதை தடுக்கும் ஆற்றல் தமிழக சுகாதாரத் துறைக்கு உள்ளது. நோய்களுக்கு எல்லாம் எதிர்காலத்தில் நாம் எப்படிப்பட்ட தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, எதிர்கால மருத்துவம் குறித்து இந்திய அளவில் ஒரு சர்வதேச மாநாடு நடத்துவது என்பது தமிழத்தில் மட்டும்தான்.

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு என்பது கடந்த ஆண்டை விட இந்திய அளவில், 9 சதவீதம் குறைந்துள்ளது. இதில், விருதுநகர் மாவட்டத்தில் ஒரு உயிரிழப்பு கூட இல்லை. மயிலாடுதுறையில் ஒரே ஊசியை பயன்படுத்தியாக வீடியோ மூலம் கண்டறியப்பட்டதால், அங்கிருந்த பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லை. தமிழகத்தில் தான் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கிடங்கு உள்ளது. ஆறு மாவட்டங்களில் கிடங்கு இல்லாமல் இருந்தது. அதற்கு, 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ கிடங்கு அமைக்கப்படுகிறது.

- சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத் துைற அமைச்சர்

Advertisement