சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் 2 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் ஒருவர்மட்டுமே பணியில் இருந்தார். அவரும் பணி மாறுதலில் சென்றுவிட்டார். அதேபோல் சுகாதார அலுவலர் செப்., மாதம் பணி மாறுதலில் சென்றார். இதனால் பிறப்பு இறப்பு சான்றுக்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தற்போது தேவகோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் கூடுதல் பணியாக பார்க்கிறார். நிரந்தரமாக சுகாதார அலுவலர், ஆய்வாளரை சிவகங்கை நகராட்சியில் பணியமர்த்த வேண்டும். நகராட்சியில் துப்புரவு பணி, சுகாதாரம்,கழிவு நீர் சுத்திகரிப்பு, பிறப்பு, இறப்பு பதிவில் தொய்வு ஏற்படுவதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொது பணி மேற்பார்வையாளர் பணியிடமும் காலியாக உள்ளது. இதனால் நகராட்சியில் குடிநீர் விநியோகத்தை கண்காணிக்க முடியவில்லை. பொறியாளர் பணியிடமும் காலியாக உள்ளது.

தேவகோட்டை நகராட்சி பொறியாளரே இந்த நகராட்சி பணியையும் சேர்த்து பார்க்கிறார். நகராட்சியில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் நகராட்சி பணிகள் அனைத்தும் தேக்கம் அடைகிறது.

கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், ஆய்வாளரும், பொறியாளரும் தேவகோட்டை நகராட்சியில் இருந்து பொறுப்பு பார்க்கிறார்கள். பொது பணி மேற்பார்வையாளர் பணியிடம் காலியாக உள்ளது. அரசுக்கு கடிதம் வைத்துள்ளோம் அரசுதான் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

Advertisement