மாயனுார் கதவணையில் தண்ணீர் வரத்து குறைவால் வறண்டுள்ள காவிரி ஆறு

கரூர்: மாயனுார் கதவணையில் நீர் வரத்து குறைவாக இருப்பதால், காவிரிஆற்றில் பல இடங்கள் வறண்டு காணப்படுகிறது.


டெல்டா மாவட்டங்களுக்கு, மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த ஜூலை, 28 முதல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள, பாசன பகுதிகளில் மழையை பொருத்து அணையில் நீர் திறப்பு அதிகாரிப்பது அல்லது குறைக்கப்படும். கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினா-டிக்கு, 13 ஆயிரத்து, 684 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 13 ஆயிரத்து, 898 கன அடி தண்ணீர் வந்தது.சாகுபடிக்காக காவிரியாற்றில், 12 ஆயிரத்து, 628 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட, மூன்று பாசன வாய்க்கால்களில், 1,270 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியதால், ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, குறைவாக தண்ணீர் திறக்கப்-பட்டு வருவதால், கதவணையில் பல இடங்களில் வறண்டு காணப்படுகிறது.
* திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 436 கன அடி தண்ணீர் வரத்தானது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர் மட்டம், 82.12 அடியாக இருந்தது. பாசனத்திற்காக ஆற்றில், 1,208 கன அடி, வாய்க்காலில், 436 அடி திறக்கப்பட்டு வருகி-றது.
* க.பரமத்தி அருகே உள்ள ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்-றைய நிலவரப்படி நீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 16.96 அடியாக உள்ளது.

Advertisement