மேட்டூர் அணை நீர்வரத்து 7,153 கன அடியாக சரிவு

மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜூலை, 30ல் அணை நிரம்பிய நிலையில், நீர்வரத்து சரிவு, டெல்டா பாசன நீர்திறப்பால் படிப்படியாக நீர்மட்டம் குறையத்-தொடங்கியது.

நேற்று முன்தினம் வினாடிக்கு, 10,831 கனஅடி-யாக இருந்த அணை நீர்வரத்து நேற்று, 7,153 கன அடியாக சரிந்-தது. அணை நீர்மட்டம், 94.09 அடியாக இருந்தது. நேற்று முன்-தினம், 58.21 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, நேற்று, 57.45 டி.எம்.சி.,யாக குறைந்தது. 65 நாட்களில் அணை நீர்மட்டம், 26 அடி குறைந்துள்ளது.

Advertisement