வெயிலால் பரங்கிக்காய் விளைச்சல் பாதிப்பு ஆத்துார் விவசாயிகள் கவலை

ஆத்துார்: ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகைையை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள், வெள்ளை பூசணி, மஞ்சள் பூசணி எனும் பரங்கிக்காய் கணிச-மான அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

ஆயுத பூஜை மட்-டுமின்றி புரட்டாசி சனி விரதத்துக்கு பரங்கிக்காய் பயன்படுத்தப்-படுகிறது. இந்த காய் சாகுபடி செய்யும் விவசாயிகள், பந்தல், விசால வயல்வெளியில் சாகுபடி செய்கின்றனர். இந்த கொடி வகை காய்க்கு அதிக உரம், பூச்சிக்கொல்லி மருந்து தேவை-யில்லை. சாண எரு இருந்தால் போதும்; நல்ல லாபம் பார்க்-கலாம். தற்போது ஆயுத பூஜைக்கு பரங்கிக்காய் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து பெரியேரி விவசாயி ரவி கூறியதாவது:ஒரு ஏக்கரில் ஒரு கிலோ பூசணி விதைக்க வேண்டும். நன்கு மட்கிய சாண எருவில் பூசணி விதைக்கும்போது கொடி பரவுவதற்கு ஏற்ப இடைவெளி விட வேண்டும். அப்படி விதைத்த பின், 90 நாளில் அறுவடை செய்யும்போது பச்சையில் இருந்து மஞ்சள் நிறத்துக்கு பரங்கிக்காய் மாறி இருக்கும். ஏக்கருக்கு, 25 டன் மகசூல் எடுக்-கலாம். நான், 2 ஏக்கரில் பரங்கிக்காய் சாகுபடி செய்துள்ளேன். மழை போதிய அளவில் இல்லாதது, வெயில் தாக்கம் போன்ற கால நிலை மாற்றத்தால் விளைச்சல் குறைந்துள்ளது. ஏக்கருக்கு, 10 முதல், 15 டன் வரை விளைச்சல் உள்ளது. ஆயுத பூஜைக்கு வியாபாரிகள், விவசாய தோட்டத்துக்கு வந்து வாங்கிச்செல்கின்-றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement