பழைய சைக்கிளில் பேட்டரி மோட்டார் பள்ளி மாணவருக்கு அமைச்சர்கள் பாராட்டு

ஆத்துார்: பழைய சைக்கிளில் பேட்டரி மோட்டார் பொருத்தி, பள்ளிக்கு சென்று வரும் அரசு பள்ளி மாணவரை, அமைச்சர்கள் பாராட்-டினர்.


சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சி சக்தி நகரை சேர்ந்த விவசாயி செந்தில், 50. இவரது மகன் அபி ஷேக், 15. பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். 7 கி.மீ.,ல் உள்ள பள்ளிக்கு சைக்கிளில் செல்வதற்கு, 45 நிமிடத்துக்கு மேல் ஆக, உரிய நேரத்தில் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.இதனால் அபி ஷேக், பழைய சைக்கிளில் பேட்டரி மோட்டார் பொருத்தி இயக்க முடிவு செய்தார். அதற்கு, 9ம் வகுப்பு முதலே, தந்தை உதவியுடன் முயற்சி செய்து வந்தார். சைக்கிளில், 2,800 ஆர்.பி.எம்., வேக மோட்டார் பொருத்தி, 30 கி.மீ., வேக திறன் கொண்ட பேட்டரி மூலம் சைக்கிளை இயக்கியுள்ளார். இந்த பேட்டரி சைக்கிளில், 15 முதல், 20 நிமிடத்தில் செல்ல முடி-வதால் தற்போது மாணவர், உரிய நேரத்தில் பள்ளி சென்று வரு-கிறார்.
இதுகுறித்து அபிஷேக் கூறியதாவது: பள்ளிக்கு சைக்கிளில், 15 கி.மீ., சென்றுவந்தேன். பைக், மொபட்டுகளை, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டக்கூடாது. அதனால் எலக்ட்ரிக் சைக்கிள் தயாரிக்க முடிவு செய்தேன். அதன்படி பழைய சைக்கிளில் பேட்-டரியை பொருத்தினேன். 2,800 ஆர்.பி.எம்., 24 வோல்ட், 250 வாட்ஸ் திறன் கொண்டது. பிரேக் லைட், ஹார்ன், முகப்பு விளக்கு உள்ளதால் இரவிலும் பயணிக்கலாம். 3 மணி நேரம் சார்ஜ் போட்டால், 30 கி.மீ., பயணிக்கலாம். இதற்கு சார்ஜ் போடுவதற்கு ஏற்படும் மின்சார செலவு, ஒரு நாளைக்கு ஒரு ரூபாய். பேட்டரி சைக்கிள் உதவியுடன் பள்ளிக்கு சென்று வரு-கிறேன். பிளஸ் 1ல் அறிவியல் பிரிவில் சேர்ந்து பல கண்டுபிடிப்-புகளை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் அபிஷேக்கை, அப்பகுதி மக்கள் பாராட்டினர். இதை அறிந்து தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜா, அவர்களது, 'எக்ஸ்' வலைதளத்தில், அபி ஷேக்கை பாராட்டினர்.அதில், 'பெத்தநாயக்-கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அபிஷேக், பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்து பள்ளிக்கு சென்று வருகின்றார். அரசுப்பள்ளி மாணவர்களின் சாத-னைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்து. தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசு பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம்' என குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்து அபிஷேக்கிடம் பேச ஏற்பாடு செய்யும்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீருக்கு, அமைச்சர் மகேஷ் உத்தர-விட்டார். இதனால் அபிஷேக் வீட்டுக்கு அலுவலர்கள் சென்று, மொபைல் போன் வழியே அமைச்சரிடம் பேச வைத்தனர்.அப்-போது அமைச்சர் மகேஷ், 'உங்கள் செய்தியை பார்த்தேன். சைக்-கிளில் பேட்டரி பொருத்தியுள்ள கண்டுபிடிப்பு பெருமை அளிக்-கிறது. அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் நீங்கள், 'ரோல் மாடலாக' இருக்கிறீர்கள். இத்தகவல் கேட்டு முதல்வர், துணை முதல்வர் மகிழ்ச்சி அடைந்தனர். பிளஸ் 1ல் அறிவியல் குரூப் எடுங்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்-பாக ஆலோசனை தெரிவித்தால் அதை நடைமுறைப்படுத்தலாம். நன்றாக படித்து சாதனை புரிய வாழ்த்துகிறேன்' என, மாணவ-ரிடம் கூறினார்.

Advertisement