அண்ணா தொழிற்சங்க செயலர் 'சஸ்பெண்ட்' டாஸ்மாக் கூட்ட நிகழ்வு வெளியாக காரணம்?

பனமரத்துப்பட்டி: டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதற்கு, டாஸ்மாக் அதிகாரிகளின் ஆய்வு கூட்ட நிகழ்வு வெளியாக காரணமாக இருந்ததாக நடவ-டிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


சேலம் மாவட்டம் தாரமங்கலம் டாஸ்மாக் கடை கூடுதல் மேற்-பார்வையாளர் கஜேந்திரன். அவர், டாஸ்மாக் அண்ணா தொழிற்-சங்க மாவட்ட செயலராக உள்ளார். அவர் கடை பணிக்கு வர-வில்லை என, கடந்த, 30ல் மாவட்ட மேலாளர், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகளின் ஆய்வு கூட்ட நிகழ்வு குறித்து, 'டிவி', பத்திரிகைகளில் செய்தி வர காரணமாக இருந்தது, டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாக பத்திரிகைகளில் வரும் செய்தியை, 'வாட்ஸாப்' மூலம் அனைவருக்கும் அனுப்பு-வது உள்ளிட்ட புகாரும் தெரிவிக்கப்பட்டது.இதுகுறித்து கஜேந்திரன் கூறியதாவது: ஜூனில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு அழைப்பு இல்லை. நான் பங்கேற்கவும் இல்லை. அந்த நிகழ்வு குறித்து எனக்கு தெரியாது. 'டாஸ்மாக்' நிர்வா-கத்தில் நடக்கும் முறைகேடு குறித்து சுட்டிக்காட்டியதால் பலி வாங்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்படுகின்றனர். தாரமங்-கலம் கடையில் கூடுதல் மேற்பார்வையாளராக நியமிக்கப்-பட்டேன். ஏற்கனவே அந்த கடையில் உள்ள மேற்பார்வையாளர், அனைத்து பணிகளையும் செய்கிறார். அதிக தொகைக்கு மது விற்கும் கடையில் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் மட்டும் மேற்-பார்வையாளராக உள்ளார். குறைந்த தொகைக்கு மது விற்கும் கடைகளில் எதிர் கட்சியை சேர்ந்த இரண்டு, மூன்று மேற்பார்-வையாளர்களை நியமித்து அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படு-கின்றனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர், இ.பி.எஸ்.,யிடம் புகார் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு வாரம் வேலைக்கு வரா-தது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. அனைத்து கடைகளிலும் இரு மேற்பார்வையா-ளர்கள் உள்ளனர். மேலும் நாங்கள் கட்சியை பார்ப்பதில்லை' என்றனர்.

Advertisement