சுற்றுலா அமைச்சரை வரவேற்க தி.மு.க.,வினர் தடபுடல் ஏற்பாடு

சேலம்: சேலம் வரும் சுற்றுலாத்துறை அமைச்சரை வரவேற்க, தி.மு.க.,வினர் தடபுடல் ஏற்பாடு செய்துள்ளனர்.


சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன். தி.மு.க.,வின் மத்திய மாவட்ட செயலருமான இவர், கடந்த, 28ல் தமிழக அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக பொறுப்பேற்ற பின் இன்று காலை, 11:00 மணிக்கு, சென்னையில் இருந்து ரயில் மூலம் சேலம் ஜங்ஷன் வருகிறார். அங்கு ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க., சார்பில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து மாநகரில் உள்ள ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணா-நிதி, ஆறுமுகம் சிலைகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பூலாவரியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆறு-முகம் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்துகிறார். பின் அவரது எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கட்சி
யினர், மக்களை சந்திக்கிறார். அவரை வரவேற்கும்படி, மாநகர முக்கிய சாலைகளில், கட்சி கொடிகள், தோரணங்களால் வர-வேற்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அஸ்தம்பட்-டியில் உள்ள வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., அலுவலகமும் வெள்ளை அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன்
காட்சியளிக்கிறது.
கடந்து வந்த பாதை...
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில், 2006 முதல், 2011 வரை, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம், விவசாய துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதற்கு பின் தற்போது, சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முதல்முறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் அரசியலில் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.
'பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்' என அழைக்கப்பட்ட இவர், 1980ல், தி.மு.க.,வின் மாணவர் அணி உறுப்பினராக சேர்ந்தார். பி.ஏ., பி.எல்., படித்த அவர், 1985 முதல், 1992 வரை, சேலம் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 1992 முதல், 1999 வரை, சேலம் மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளராகவும், 1999 முதல், 2015 வரை, இளைஞரணி மாநில துணை செயலராகவும் பதவி வகித்தார்.
இளைஞரணி செயலராக இருந்த ஸ்டாலினுடன், தீவிர களப்பணியாற்றி கவனம் ஈர்த்தார். சேலம் மாவட்ட தி.மு.க., வக்கீல் அணி அமைப்பாளர், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர், தொ.மு.ச., தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த ராஜேந்திரன், 2006ல், முதல்முறை பனமரத்துப்பட்டி தொகுதியில் இருந்து, எம்.எல்.ஏ.,வாக சட்டசபைக்கு சென்றார். பின், 2016, 2021 என அடுத்தடுத்த தேர்தல்களில், சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 முதல், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., செயலராக உள்ளார். 2021ல் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தபோது சேலம் மாவட்டத்தில் தி.மு.க.,வை பலப்படுத்த, ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பின் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் பெரும்பான்மை இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு உறுதுணையாக இருந்த ராஜேந்திரனுக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பின், தி.மு.க. அமைச்சரவையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் இணைந்திருப்பது, கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement