தேசிய குழுவினர் எப்படி ஆய்வு செய்வர்? அரசு மருத்துவருக்கு விளக்கிய மாநில குழு

ஓமலுார்: ஓமலுார் அரசு மருத்துவமனை, 62 படுக்கை வசதிகளுடன் செயல்படுகிறது. புறநோயாளிகளாக, 300 முதல், 500 பேர் வந்து செல்கின்றனர். அங்கு விபத்து, அவசர சிகிச்சை, மகப்பேறு உள்-பட பல்வேறு பிரிவுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் என, 90க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

அங்கு, 100 படுக்கை வசதியாக மாற்ற, டில்லியில் இருந்து தேசிய தர நிர்ணய குழு-வினர், வரும், 14, 15, 16ல் ஆய்வு செய்ய உள்ளனர். அதற்கு மாநில தர நிர்ணய குழுவினர், ஏற்கனவே மருத்துவமனையை ஆய்வு செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று, 2ம் முறையாக, 3 நாள் ஆய்வு பணியை நேற்று தொடங்கினர். சென்னை தர நிர்-ணய குழு கண்காணிப்பு அலுவலர் அசோக்குமார் தலைமையில், 3 பேர் அடங்கிய குழுவினர், மருத்துவமனை கட்டமைப்பு, செயல்பாடுகளை பார்வையிட்டனர். பின் படக்காட்சிகள் மூலம், டில்லி குழுவினர் எவ்வாறு ஆய்வு செய்வர் என, மருத்துவம-னையின் முதன்மை மருத்துவ அலுவலர் ஹெலன்குமார் உள்-ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஆலோசனை நடத்-தினர். நாளை வரை ஆய்வு நடக்கிறது.

Advertisement