அங்கன்வாடிகள் மூலம் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு: மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தகவல்

தேனி : மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் தினமும் 18 ஆயிரம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துத்துடன் முன்பருவ கல்வி வழங்கப்படுகிறது என ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது. பள்ளிகளில் சேர்வதற்கு முன் குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி அங்கன்வாடி மையங்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் பற்றி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் தினமலர் நாளிதழ் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரின் பணி என்ன



மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள், முன்பருவ கல்வி சரிவர வழங்கப்படுவதை உறுதி செய்தல். 9வட்டாரங்களில் உள்ள திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பணிகளை மேற்கொள்கின்றனரா என ஆய்வு செய்வது, தினமும் 5 அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வது முக்கிய பணிகளாகும். மேலும் அவர்களுக்கு ஊட்ச்சத்து மிகுந்த உணவுகளை வழங்க பெற்றோருக்கு அறிவுறுத்துகிறோம். வளர் இளம் பெண்கள் இரும்புசத்தின் அவசியம் பற்றி தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை 9 வட்டாரங்களில் 1065 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மையத்திற்கு வருகின்றனர். குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டத்து உணவுகள்குழந்தைகளுக்கு தக்காளிசாதம், காய்கறி கலவை சாதம், வெஜிடபிள் புலாவ், எலுமிச்சை சாதம், பருப்பு சாதம் உள்ளிட்டவை 6 நாட்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர 3 நாட்கள் வேகவைத்த முட்டை, சுண்டல், உருளை கிழங்கு வழங்கப்படுகிறது. குழந்தைகள் தவிர அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்த 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பாலுாட்டும் தாய்மார்களுக்கு சத்து மாவு வழங்கப்படுகிறது. எந்த வயதில் குழந்தைகள் மையங்களுக்கு வரலாம் அங்கன்வாடி மையம் மூலம் 6 வயது குழந்தைகள் பயனாளிகளாக உள்ளனர். இதில் 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படுகிறது. இவர்களில் 3 வயது முதல் நேரடியாக அங்கன்வாடி மையங்களுக்கு வருகின்றனர். அங்கன்வாடி செயல்படும் நேரம்



மையங்கள் காலை 8:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை செயல்பட வேண்டும். இதில் குழந்தைகள் 9:30 மணிக்குள் அழைத்து வரப்படுகின்றனர். இவர்களுக்கு மதிய உணவு 12:30 மணிக்கு வழங்கப்படுகிறது. மதிய உணவிற்கு பின் மதியம் 3:00 மணி வரை துாங்க வைக்கப்படுகின்றனர். அதற்கு மேல் அவர்களுடைய பெற்றோர்கள் அழைத்து செல்கின்றனர். இல்லையெனில், பணியாளர்கள், உதவியாளர்கள் வீட்டுக்கு நேரில் சென்று குழந்தைகளை விடுகின்றனர்.

குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறதா மருத்துவத்துறை சார்பில் வட்டாரத்திற்கு ஒரு குழு செயல்படுகிறது. இந்த குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்கின்றன. இப்பரிசோதனையில் குழந்தைகளுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் பெற்றோருக்கு தெரிவிக்கப்படுகிறது. பின் அந்த குழந்தைகள் உடல் நிலையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ஒரு மையத்திற்கு எத்தனை பணியாளர்கள் இருக்க வேண்டும் ஒவ்வொரு அங்கன்வாடி மையத்திலும் ஒரு பணியாளர், ஒரு உதவியாளர் இருக்க வேண்டும். அவ்வாறு கணக்கிடுகையில் 2130 பேர் பணியில் இருக்க வேண்டும். மாவட்டத்தில் தற்போது 1500 பேர் பணியில் உள்ளனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறதா



மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் அங்கன்வாடிகளுக்கு அழைத்து வருவதில்லை. அந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து இணை உணவுகள் வீடுகளுக்கு கொண்டு சென்று வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 22 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மட்டும் அங்கன்வாடி மையத்திற்கு நேரடியாக வருகை தருகின்றனர்.

Advertisement