செப்டம்பரில் 537.4 மி.மீ., மழை

தேனி: மாவட்டத்தில் ஆண்டிபட்டி, அரண்மனைப்புதுார், போடி, கூடலுார், உத்தமபாளையம், வீரபாண்டி,பெரியகுளம், தேக்கடி, வைகை, மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகநதி, முல்லைபெரியாறு ஆகிய இடங்களில் மழைமானி வைத்து மழையின் அளவு கணக்கிடப்படுகிறது.

செப்., மாதம் 16 நாட்கள் ஒரு இடத்தில் கூட மழை பதிவாகவில்லை. ஆறு நாட்கள் 2, 3 இடங்களில் மட்டும் மழை பெய்துள்ளது.

8 நாட்கள் பரவலாக மழை பெய்துள்ளது. மொத்தத்தில் 537.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இந்த மழை அளவு கடந்த 4 ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைவு ஆகும். 2023 செப்.,ல் 1544.2 மி.மீ., 2022 செப்.,ல் 856.2மி.மீ., 2021 செப்.,ல் 703.50 மி.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement